ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-ரிஷபம்

இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி ) மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது.

சிறந்த உழைப்பாளியான ரிஷப ராசி அன்பர்களே!! உங்கள் ராசியை சுக்கிரனும், புதனும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால், பணியிடத்தில் திட்டமிட்டும், நேரம் தவறாமலும் செயல்பட்டால் சங்கடங்கள் நீங்கி சாதனைகள் உருவாகும். சிலருக்கு இடமாற்றம் பதவி மாற்றம் வரலாம், மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். பணி சார்ந்த பயணம் செல்லக்கூடிய சமயத்தில் உரிய ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

பொறுப்பு, சுமை பற்றியோ மேல் இடத்தைப் பற்றியோ உங்கள் நிழலிடம் கூட புலம்ப வேண்டாம். செல்போன் பேசும் சமயத்தில் வார்த்தைகளில் நிதானமாக இருங்கள். எந்த காரணத்தை முன்னிட்டும் வீண் ரோஷத்தால் இருக்கின்ற வேலையை உதற வேண்டாம். அப்புறம் வேலை தேடுவதே வேலையாகிவிடலாம்.

விட்டுக் கொடுத்துப் போனால் வீட்டில் விசேஷங்கள் வரும். சுப காரியங்களில் வீண் ஆடம்பரம் வேண்டாம். ஆடை, ஆபரணம், பொருள் சேரும். வரவு சீராக இருக்கும். வரவில்  ஒரு பங்கை சேமிக்க பழகுங்கள். வீணான சகவாசம் தேனாக பேசி உங்கள் குடும்ப விஷயங்களை பஞ்சாயத்து சொல்ல நினைக்கலாம் அவர்களின் வார்த்தைகளில் மயங்கி உங்கள் வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம்.

4ல் சந்திரன் 

ராசிக்கு 4-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பெறுவீர்கள். பணம் வரத் தொடங்கும். வழக்குகள் சாதகமாகும்.

12ல் குரு 

 

 

குருபகவான் 30.04.2024  வரை 12 ஆம் வீட்டில் இருப்பதால் சின்ன சின்ன செலவுகள் அதிகமாகி கொண்டே போகும். ஆக்கபூர்வமான பணிக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டி இருக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்க.ள் பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும்.

01.05.2024ம்  தேதி முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் ஜென்ம குருவாக உங்கள் ராசியில் வந்து அமர இருக்கிறார். எனவே உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும். லாகிரி வஸ்துகளை பயன்படுத்துபவர்கள் இனி அவற்றை அறவே தவிர்க்க வேண்டும். பிள்ளைகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். உணர்ச்சிவசப்படாமல் எந்த முடிவையும் எடுப்பது நல்லது.

11ல் ராகு 

இந்த ஆண்டு முழுவதும் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டில் நிற்பதால் பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். சகோதர, சகோதரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.

5ல் கேது 

கேது பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இந்த ஆண்டு முழுக்க தொடர்வதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். அவர்களின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வறுத்து, பொறித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் தெய்வ நேர்த்திக் கடனை குடும்பத்துடன் சென்று முடிப்பீர்கள்.

10ல் சனி 

இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் தொடர்வதால் உங்கள் திறமை வெளிப்படும். பண பலம் கூடும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ். கௌரவம் வளரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சாதகமாக தீர்வு கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பம் ஏற்படும். நட்பு வட்டம் விரியும்.

பலன் தரும் பரிகாரம்

ஒருமுறை திருப்பதி சென்று அந்த வேங்கடவனை தரிசித்துவிட்டு வாருங்கள் வாழ்வில் நன்மை கிட்டும்

Recommended For You

About the Author: admin