இலங்கையில் தலைசுற்ற வைக்கும் வெங்காயத்தின் விலை!

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 650 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் பெரிய சடுதியாக அதிகரித்து செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையில், 1 கிலோ பெரிய வெங்காயத்தின் விலை நாளைய தினம் 700 ரூபாவை தாண்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வர்க்கர்கள் கூறுகின்றனர்.

உள்நாட்டில் பெரிய வெங்காய செய்கை இந்த ஆண்டு பாரியளவில் குறைவடைந்தமையே இதற்கான காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor