பாராளுமன்ற புகைவீச்சுக்கு ராகுல் காந்தி கூறும் காரணம் என்ன?

பாராளுமன்றத்தில் நடந்த வண்ணப்புகை வீச்சு சம்பவத்திற்கு விலைவாசி உயர்வும், வேலையில்லாத் திண்டாமும்தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

டில்லியில் தேர்தல் ஆயத்தப் பணிகள் தொடர்பான கூட்டத்தை முடித்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘பாராளுமன்றத்தில் இளைஞர்கள் அத்துமீறியதற்கு மோடியின் கொள்கைகள்தான் காரணம்’ எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் செயல்படாத கொள்கைகளால் விலைவாசிகள் உயர்ந்துள்ளது, இளைஞர்கள் வேலையில்லாமல் அல்லல் படுகிறார்கள். அதானாலேயே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் கூறினார். நாட்டின் மிகப்பெரிய பிரச்னை வேலையில்லாத் திண்டாட்டம்தான் எனக் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தின் மக்கவையில் பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்த சாகர் மற்றும் மனோரஞ்சன் ஆகியோர் வண்ணப் புகைக் குப்பிகளை வீசிய சம்பவம் நாட்டையே அதிர்ச்சியாக்கியுள்ளது. பாராளுமன்றத்தின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.

அதே நேரத்தில், பாராளுமன்றத்திற்கு வெளியே அமோல் ஷின்டே மற்றும் நீலம் தேவி ஆகியோர் வண்ணப்புகைக் குப்பிகளை வீசியதோடு, ‘சர்வாதிகாரம் வேலை செய்யாது’ எனக் கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: admin