தனிநபரின் வரிச் செலவு அதிகரிக்கும்

அரசாங்கம் விதிக்க உத்தேசித்துள்ள வரிகள் காரணமாக, தனி நபர் 2024ஆம் ஆண்டில் மேலும் 30,000 ரூபாவை அரசாங்கத்திற்கு வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும் என வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு வெளிப்படுத்தியுள்ளது.

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு இலட்சம் ரூபா வரி செலுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

எனினும் 179 பில்லியன் வசூலிக்கப்படாத வரிகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தின் பிரகாரம் வங்கிக் கணக்குகள் அல்லது சொத்துக்களிலிருந்து மேற்படி வரிகளை உடனடியாகப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வழிகாட்டுதல்களை குழு வழங்க வேண்டும் என்று குழு குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin