இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ‘ஷைர் பாக்’ (சிங்கம் தோட்டம்) எனப்படும் உள்ளூர் உயிரியல் பூங்காவில் உள்ள புலிக் கூண்டில் அடையாளம் தெரியாத நபரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இறந்த உடலின் கால்கள் உட்பட உடலின் கீழ் பகுதியின் இறைச்சியை புலிகள் உட்கொண்டுள்ளதாக மாநில வனவிலங்கு திணைக்களத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் அவர் கால்சட்டை மற்றும் சட்டை அணிந்திருந்தமை தெரியவந்துள்ளது.
மிருகக்காட்சிசாலையின் ஊழியர் ஒருவர் அங்கு வைக்கப்பட்டிருந்த நான்கு புலிகளுக்கு உணவளிக்கச் சென்ற போது இந்த மனித சடலம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புலி கூண்டில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து, பஞ்சாப் துணை ஆய்வாளர் ஜாகீர் அன்வர் ஜப்பா, சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், அலட்சியமாக செயல்பட்ட உயிரியல் பூங்கா அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
உடல் பிரேத பரிசோதனைக்காக பஹவால் விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இறந்தவர் போதைக்கு அடிமையானவர் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்ததாகவும், உடலின் கீழ்ப்பகுதியின் சதையை புலிகள் உட்கொண்ட போதிலும், பாதிக்கப்பட்டவரின் முகம் மற்றும் மேல் பாகங்கள் இன்னும் அப்படியே இருப்பதாக பராமரிப்பாளர் தெரிவித்தார்.
அந்த நபர் எப்படி புலி கூண்டுக்குள் நுழைந்தார் என்பது குறித்து இரவு நேர உயிரியல் பூங்கா ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும்.