முன்பள்ளி மாணவர்களிடையே இனிப்பு நுகர்வு அதிகரிப்பு

நாட்டில் முன்பள்ளி பாடசாலை மாணவர்களிடையே இனிப்பு பானங்கள் மற்றும் இனிப்பு உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள முன்பள்ளி மாணவர்களை மையப்படுத்தி மேற்கொண்ட கணக்கெடுப்பிலேயே இது தெரியவந்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்பள்ளி சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் பிரிவுத் தலைவி சமூக சுகாதார வைத்திய நிபுணர் இனோகா விக்கிரமசிங்க இந்தத் தகவலை வெளியிட்டார்.

Recommended For You

About the Author: admin