நாட்டில் சர்ச்சையை ஏற்ப்படுத்திய மருந்து தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் பல நோயாளர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்திய இம்யூனோகுளோபுலின் என்ற மருந்தை உற்பத்தி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய இரத்தமாற்ற சேவையின் பணிப்பாளர் ஆகியோரிடம் தனித்தனியாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் ஆன்டிபாடி மருந்தை இலங்கைக்கு இறக்குமதி செய்ததாக கூறிய நிறுவனத்தின் உரிமையாளர் சமீபத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த மருந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், அவை இலங்கையிலேயே தயாரிக்கப்பட்டவை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பின்னணியில், சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பதற்காக தேசிய இரத்த சேவையில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டதாக சுகாதார நிபுணர் சங்கங்கள் தெரிவித்தன.

இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்கவின் வீட்டுக்குச் சென்று வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

கிட்டத்தட்ட 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor