அமெரிக்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள மைனே (Maine) மாநிலத்தின் லெவிஸ்டன் பகுதியில் மரம் நபர் நடந்திய துப்பாக்கிச் சூட்டில், 22 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மைனே மாநில காவல்துறை இதுகுறித்து தனது எக்ஸ் சமூக ஊடகத்தில், “லூயிஸ்டனில் துப்பாக்கி சுடுதலில் ஒருவர் ஈடுபட்டு வருகிறார். தங்குமிடத்தில் பத்திரமாக இருங்கள். வீட்டை பூட்டிக்கொண்டு பத்திரமாக இருங்கள் வெளியே வரவேண்டாம். உங்கள் பகுதியில் எதாவது சந்தேகத்துக்கு இடமான நபர்கள் உலா வந்தால் 911 என்ற எண்ணுக்கு அழைத்து தெரியப்படுத்தவும். ” என்று பதிவிட்டுள்ளது.
லெவிஸ்டன் பகுதியில் உள்ள பௌலிங் விளையாட்டு அரங்கம், உணவு விடுதி, வால்மார்ட் விநியோக மையம் என மூன்று வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட மர்ம நபரின் மூன்று புகைப்படங்களையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.