இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 22 சதமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்றைய தினம் 318 ரூபா 14 சதமாக காணப்பட்டது.
அத்துடன் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 328 ரூபா 90 சதமாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் நேற்றைய தின விற்பனை பெறுமதி 328 ரூபா 91 சதமாக காணப்பட்டது.