யாழ். இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் காந்தி சேவா சங்கத்தின் இணைந்த ஏற்பாட்டில் இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தினை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியின் 154 ஆவது ஜனன தின நினைவேந்தலான அஞ்சலி இன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மகாத்மா காந்தி சிலையடியில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு அவரின் காந்தியின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதில் காந்தி சேவா சங்கத்தினால் வருடாந்தம் வெளியிட்டு வரும் காந்தீயம் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதில் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ. சிவஞானம், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன்,யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன்,யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி,யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா மற்றும் மதத்தலைவர்கள்
யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட, துணைநிலை பேராசிரியர்கள்,கலைத்துறையினர், ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு நினைவுஞ்சலினை செலுத்தினர்.