‘உழைப்பால் உயரலாம் ‘ என்ற வாசகத்துக்கமைய வாழ்வில் முன்னேற்றப்பாதையை அடைவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டாலும் சிலருக்கு அதற்கான வழிவகைகள் அமையப்பெறுவதற்கு காலதாமதம் ஆகிவிடுகின்றது.
தொடர்ச்சியாக நிலைவும் பணக் கஷ்டம், கடன் பிரச்சனை, பண முடக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, சிக்கி தவிர்ப்பவர்கள் வீட்டிலேயே எளிய பரிகாரத்தை மேற்கொண்டு சுபீட்ஷமான வாழ்க்கை முறையினை பின்பற்றி ஒழுகுவாம்.
பணக் கஷ்டம் இன்றி செல்வம் திழைக்க
பணக் கஷ்டம் இன்றி செல்வம் திழைக்க மகாலட்சுமியின் அருள் மற்றும் பெருமாளின் அனுக்கிரகமும் நமக்கு இருக்க வேண்டும்.
பணக் கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் தங்கத்தால் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையானின் படத்தை வீட்டில் மாட்டி வைத்து, அடிக்கடி பார்த்து வரலாம்.
அதிலும் பின்புலம் பச்சை நிறத்தில் இருக்க, அதன் முன் பகுதியில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் பெருமாளின் உருவத்தை அடிக்கடி பார்த்து வந்தால் பண கஷ்டம் நீங்கி விடும்.
அப்படி பணக் கஷ்டம் நீங்கியதும் திருப்பதி சென்று பெருமாளை தரிசித்து விட்டு வரலாம்.
அடுத்த பரிகாரமாக நிதமும் காலையில் எழுந்ததும் வீட்டில் உப்பு வைத்திருக்கும் ஜாடிக்குள் கை வைத்து, “பணக்கஷ்டம் விரைவில் தீர வேண்டும். தடையில்லாத பண வரவு கிடைக்க வேண்டும், செல்வம் சேர வேண்டும்” என வேண்டிக் கொள்ள வேண்டும்.
மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யும் உப்பு
உப்பு என்பது மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்யும் பொருட்களில் ஒன்றாகும். உப்பை தினமும் காலையில் தொட்டு வணங்கி வருவதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.
பணக்கஷ்டம் தீருவதற்கு மற்றொரு எளிய பரிகாரமாக வீட்டில் உள்ள பெருமாள் படத்திற்கு தினமும் சாதம் படைத்து வழிபட வரலாம்.
வீட்டில் உள்ள பெண்கள் தினமும் காலையில் எழுந்ததும் குளித்து விட்டு, சமையல் செய்யும் சாதத்தில் சிறிதளவு ஒரு சிறு தட்டில் எடுத்து, அதில் கொஞ்சம் சுத்தமான பசு நெய் மற்றும் ஒன்றிரண்டு துளசி இலைகளை கலந்து பெருமாளின் படத்திற்கு முன் ஒரு அகல் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வர வேண்டும்.
இந்த பிரசாதத்தை வீட்டில் உள்ள சாப்பிட்டு வரலாம்.
இப்படி தினசரி செய்து வந்தால் பணக்கஷ்டம், பண நெருக்கடி ஆகியவை முற்றிலுமாக நீங்கி விடும்.