பேருந்தில் பாடசாலை மாணவிக்கு தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் இருந்து கந்தானை நோக்கி சென்ற பயணிகள் போக்குவரத்து பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவிக்கே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள்
இவ்வாறு கைது செய்யப்பட்ட கடற்படை சிப்பாய் களுபோவில பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை சிப்பாய் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜா-அல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.