மருந்து ஒவ்வாமை காரணமாக இரு நோயாளர்கள் உயிரிழப்பு!

மருந்து ஒவ்வாமை காரணமாக இரு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று (10) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.

அண்மைக்காலமாக மருந்து ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட மரணங்கள் குறித்து ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையில் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இக் குழுவின் தலைமை உறுப்பினரான பேராசிரியர் சந்திம ஜீவந்தர, குழுவின் அறிக்கை குறித்து இன்று (10) விளக்கமளித்தார்.

Recommended For You

About the Author: webeditor