வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணக் கல்லூரியின் முன்னைநாள் அதிபர் டேவிட் சதாநந்தன் சொலமன் அவர்கள் 61 வயதில் காலமானார்.
திடீரென அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவரது உயிர் இடைநடுவில் பிரிந்தது.
பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இதயநோய் ஏற்பட்டே அவரது மரணம் நிகழ்ந்ததாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாண கல்லூரியின் அதிபராகவும், தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்ட உப தலைவராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.