சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை! முன்னணி முழக்கம் !!
சுழிபுரம் பறாளாய் முருகன் கோவிலிலுள்ள அரச மரம் பௌத்தத்துடன் தொடர்புடையதென வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமைக்கு எதிராகவும் அந்த வர்த்தமானி அறிவித்தல் உடன் இரத்துச் செய்யப்படல் வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சங்கானை பஸ் நிலையம் முன்பாக இன்று மாலை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


