திருகோணமலை மூதூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேரை நினைவு கூரும் வணக்க நிகழ்வு இன்று மாலை யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது.
மூதூர் படுகொலை! யாழில் நினைவேந்தல்!! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் கலந்து பங்கேற்றனர்.