மூத்த ஊடகவியலாளர் ராதேயனின் 76 -வது பிறந்த நாள் இன்று

மூத்த ஊடகவியலாளர் ராதேயனின் 76 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். ஊடக அமையத்தினர் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.

மூத்த ஊடகவியலாளரான ராதேயன் நமது ஈழநாடு, ஈழநாதம், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகவும் மேலும் வடக்கில் வெளிவரும் அச்சு ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

சிரித்திரன் குடும்பத்தின் மிக முக்கிய பங்காளராகவும் சிரித்திரன் மீண்டும் தனது பயணத்தை தொடர்வதற்கு காரண கர்த்தாவாகவும் ராதேயன் செயற்பட்டிருந்தார் .

இவர் தற்போது சிறிது காலம் நோய்வாய்பட்டுள்ள நிலையில் அவரது பிறந்த நாளை கொண்டாடும் முகமாக யாழ். ஊடக அமையத்தினர் அவரது வீட்டில் கேக்வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினர்.

Recommended For You

About the Author: S.R.KARAN