இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி மாதாந்த கட்டண திருத்தத்தின் பிரகாரம் லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பான விலைகள் இன்று (04.08.2023) அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதோடு ஒரு மெட்ரிக் தொன் 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தம்
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எரிவாயு விலை திருத்தம் அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.
கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தத்தின் பிரகாரம் 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை 204 ரூபாவினாலும், 5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை 83 ரூபாவினாலும், 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை 83 ரூபாவினாலும் குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.