வடக்கு – கிழக்கில் இன்று ஹர்த்தால்! முல்லையில் அணிதிரளும் மக்கள்

இன்று ஹர்த்தால்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்தது.

இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, பேரணி ஒன்று, வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் , பேரணியில் கலந்து கொள்வோருக்கான போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.

குறித்த ஹர்த்தாலுக்கு அனைத்துத் தரப்பினரும் அரசியல் கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்க வேண்டும் என்பதுடன் இன்றையதினம் வெள்ளிக்கிழமை வர்த்தகர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிப்பதுடன் முல்லைத்தீவில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ள போராட்டத்திலும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN