எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.அனுரகுமார வழங்கியுள்ளார்.
அதன்படி பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீட்சி பெறும் திட்டங்களுக்கு அமைய 15ஆவது குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பாய்வு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், தொகை மதிப்பீட்டுக்கு நாட்டு மக்கள் அனைவரும் சரியான தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிவியல் முறைமையிலான குடிசன மதிப்பீடு தெற்காசியாவில் இலங்கையில் முதன்முறையாக 1981ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது.