4-வது நாளாகவும் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு முயற்சி; மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் செம்பியன்பற்று வடக்குப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்குடன் தொடர்ந்து நாலாவது நாளாக இன்றும் (27-07-2023) காணி அளவீட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்குப் பகுதியைச் சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான 15 பேர்ச் (ஒன்றரை பரப்பு) காணியை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவிருந்த காணி அளவீட்டுப் பணி மக்கள் எதிர்ப்பால் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இதன்போது பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN