மரணச் சடங்கிற்கு சென்று வீடு திரும்பிய நபருக்கு நேர்ந்த சோகம்!

கேகாலையில் நபர் ஒருவர் பிரிதொரு நபரால் தாக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

கேகாலை தேவாலகம பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபர்
27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மரணச்சடங்கொன்றிற்காக சென்று வீடு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor