யாழ்.தென்மராட்சி மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மூதாட்டி நேற்று(26-07-2023) காலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
அதனையடுத்து சாவகச்சேரி நீதிவான் சடலத்தை பார்வையிட்டதோடு உடல்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தலை மற்றும் கைகளில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும், மூதாட்டி கொலை செய்யப்பட்டார் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.