மூன்று தொடருந்து சேவைகள் இன்று காலை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து இயந்திர உதவி சாரதிகளுக்கு நிலவும் பற்றாக்குறையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று மாலையும் நான்கு தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.