யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளின் கீழ் வழங்கப்படும் குழந்தைகளுக்கான திரிபோசா சத்து உணவு வழங்கலில் முறைகேடுகள் இடம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
யாழ் மாவட்டத்திற்கு என சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட திரிபோசா ஒரு மாதத்திற்கு விநியோகிக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த ஜூன் மாதம் ஒரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு வழங்கப்பட இருந்த 30 பைகள் களவாடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் திரிபோசா மாவுக்கான தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் அதனை சாட்டாக வைத்து அடுத்த முறை கிடைக்கும் என கிடைக்காத தாய்மார்களுக்கு கூறி வழி அனுப்பி வைத்தனர்.
குறித்த திரிபோசா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் களவாடப் படாத நிலையில் அதனை வழங்குவதற்காக தயார் செய்து அனுப்பி வைத்த தரப்பினரே களவாடியதாக அறியக்கிடை த்துள்ளது .
ஆகவே யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் திரிபோசா வழங்கப்பட்டு வரும் நிலையில் கிடைக்காதவர்கள் ஏன் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டால் அதிகாரிகளின் தொடர்ச்சியான ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.