யார்றா அந்த குரல்.. சர்ப்ரைஸை உடைத்த மாவீரன் படக்குழு

சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மாவீரன்’ திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார். இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor