எப்பாவல பிரதேசத்தில் 22 வயதான திருமணமான பெண்ணை, வீட்டுக்குள் புகுந்து வன்புணர்வுக்கு உட்படுத்திய கணவரின் உறவினர் தொடர்பில் பொலிசில் முறைப்பாட்டளிக்கப்பட்டுள்ளது.
கணவரது மூத்த சகோதரியின் மகன் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பெண் கணவரிடம் கூறியுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
எனினும் சமூகத்தில் முகம் கொடுக்க முடியாது என்ற காரணத்தினால், பெண்ணின் கணவன் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை எனக்கூறப்படுகிறது.
அதேசமயம் சந்தேக நபர், சம்பவம் குறித்து கிராமத்தில் ஆங்காங்கே கூறி வந்துள்ளதால், பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் சம்பவம் தொடர்பாக எப்பாவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.