உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பிற வாழ்க்கை முறைக் கோளாறுகளைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் கண்டிப்பாக சரியான அளவில் தேவை. அதேபோல் குறைந்த அளவு கலோரி உட்கொள்ளலும் உடலுக்கு அவசியம். நாம் நாள் முழுவதும் கலோரி நிறைந்த உணவுகளை உட்கொண்டால் உடல் தேவைக்கு அதிகமான கலோரிகளை சேமித்து வைக்கிறது.
நாள் முழுவதும் எவ்வளவு கலோரிகளை நாம் எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவு கலோரிகளை நாம் எரிக்க வேண்டும்.
ஆனால் இதைச் செய்யாவிட்டால் கூடுதல் கலோரிகள் உடலில் கொழுப்பு வடிவில் சேமிக்கப்படும். இதன் காரணமாக உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகின்றது.
அதே போல் உடல் பருமன் பல்வேறு வாழ்க்கை முறை கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தேங்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதுவும் கோடை காலத்தில் இளநீர் உடலுக்கு அதிக நன்மைகளை அளிக்கும்.
வெயிலின் காரணமாக பெரும்பாலானோருக்கு நீரிழப்பு பிரச்சனை ஏற்படுகின்றது. அத்தகைய சூழ்நிலையில் தலைச்சுற்றல், சோர்வு போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள்.
இவற்றை சரி செய்ய கோடை காலத்தில் பெரும்பாலும் இளநீர் பருக விரும்புகிறார்கள்.
சிலருக்கு அடிக்கடி இளநீர் குடிப்பது சலிப்பாக இருக்கும். அப்படி இருப்பவர்கள் அதற்கு பதிலாக தேங்காய் துருவலையும் சாப்பிடலாம். அல்லது இதை ஷேக்காக செய்து குடிக்கலாம்.
தேங்காய் துருவலை சாப்பிடுவதன் மூலம் பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
குறிப்பாக அதிக எடை, உடல் பருமன் ஆகியவற்றால் அவதியில் உள்ளவர்களுக்கு இவை மிகவும் உதவியாக இருக்கும்.
இளநீர் குடிப்பதால் கிடைக்கும் பிற நன்மைகளை பற்றி பார்க்கலாம்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
இளநீரில் பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உடலுக்கு நன்மை பயக்கும். இதில் வைட்டமின்-சி, ஈ, பி1 போன்ற தனிமங்கள் உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாகிறது
இளநீரில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.
அதனால்தான் மீண்டும் மீண்டும் நோய் வருபவர்கள் தினமும் இளநீர் அருந்தலாம்.
இதனால் இதய ஆரோக்கியம் வலுவாகும்.
நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்
இளநீரில் மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள் உள்ளன. இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
ஆகையால் உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால் தினமும் இளநீர் குடித்து வரலாம்.
உடனடி எடை இழப்பு
உடல் உப்பசம் அதிகமாகி உடல் எடையை உடனடியாக இழக்க விரும்புபவர்கள் தினமும் இளநீர் குடிக்கலாம்.
ஏனெனில் இதில் ஆற்றலை அளிக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன.
இதை குடிப்பதால் ஆற்றல் கிடைப்பதோடு, தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதும் தவிர்க்கப்படுகின்றது.
ஆகையால் உடல் எடையைக் குறைக்க இளநீர் மிக உதவியாக இருக்கும்.