வைத்தியசாலை விடுதிகள் (word ) மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் பயன்படுத்தப்படும் மருந்து கட்டும் பொருட்கள் துணிகள் மட்டுமன்றி அவற்றிற்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் சத்திர சிகிச்சை கூடத்தில் பயன்படுத்தப்படும் துணிக் கழிவுகள் இவற்றுடன் வெளி நோயாளர் பிரிவு மற்றும் விடுதிகள் சத்திரசிகிச்சை கூடங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் மருந்து வகைகள் ஏற்றும் ஊசிகள் ஆய்வு கூடத்தில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களும் கழிவுப் பொருட்களும் எரியூட்டிகள் மூலம் எரித்து அழிக்கப்பட வேண்டும்.
சத்திர சிகிச்சை கூடங்கள் மற்றும் பிரேத அறை போன்றவற்றில் இருந்து அகற்றப்படும் மனித உறுப்புகள் பாதுகாப்பாக ஓரிடத்தில் புதைக்கப்பட வேண்டும்
பொறுப்பு எடுக்காமல் பிரேத அறையில் நீண்ட காலம் வைக்கப்படுகின்ற சடலங்கள் மின்தகன மூலம் எரியூட்ட அல்லது புதைப்பதற்கு இட வசதிகள் ஒழுங்குபடுத்த வேண்டும் இவ்வாறான நிலைப்பாடு யாழ் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பெருங் குறைபாடாக உள்ளன.
சாதாரண பிரதேச வைத்தியசாலைகளில் கூட மருத்துவக் கழிவுகளை எரித்து அழிக்கக்கூடிய எரியூட்டிகள் இல்லாமை பெருங் குறைபாடாக காணப்படுகிறது
யாழ் மாவட்டத்தில் உள்ள நான்கு ஆதார வைத்தியசாலை மற்றும் போதனா வைத்தியசாலை போன்றவற்றில் மருத்துவக் கழிவுகள் உரிய முறையில் எரியூட்டுவதற்கு எரியூட்டிகள் மற்றும் மின் தகன வசதிகள் இல்லாததும் பெருங் குறைபாடாக உள்ளது
வைத்தியசாலைகளில் பௌதீக வளங்களை அதிகரிக்கும் நடவடிக்கைகளை சுகாதார திணைக்களம் மேற் கொள்ளுகின்றதே தவிர வைத்தியசாலை வளாகத்தில் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்காத வகையில் எரியூட்டி வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. ஒரு வைத்தியசாலையில் அமைக்கப்படும் எரியூட்டிகளிலிருந்து எழும் புகை வைத்தியசாலை சுற்றாடலிற்கு அயலில் உள்ள பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் எரியூட்டிகள் அமைக்கப்பட வேண்டும்.
மருத்துவ கழிவுகளை எரியூட்டிகள் ஊடாக தகனம் செய்யும் போது எவையும் மிஞ்சாது சூழலுக்கு எரியூட்டி ஊடாக பகை செல்வது தெரியாது எரியூட்டியில் முதலில் 650 டிகிரியில் மருத்துவக் கழிவுகள் தகனம் செய்யப்படும் தொடர்ந்து 800 தொடக்கம் ஆயிரம் செல்சியஸ் வெப்பத்தில் இரண்டாவதாக தகனம் செய்யப்படும் இதனால் சூழல் பாதிப்பு ஏற்படாது
யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை போதிய இடவசதிகள் இல்லாத காரணத்தாலும் வைத்தியசாலையைச் சுற்றி பெருமளவு குடும்பங்கள் வசிப்பதாலும் மக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையிலான எரியூட்டிகள் கடற்கரையோரங்களில் அமைக்கப்பட வேண்டும் உரிமை கோரப்படாது நீண்ட காலமாக காணப்படும் சடலங்கள் பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்லப்பட்டு கொரோணா காலத்தில் மரணமடைந்தோரின் சடலங்களை கொண்டு சென்ற மாதிரி உரிமை கோரப்படாத சடலங்கள் சத்திரசிகிச்சை கூடங்களில் மற்றும் பிரேத அறைகளில் எடுக்கப்படும் மனித உறுப்புகள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு மின்தகனம் செய்யப்பட வேண்டும்
நோயாளர்கள் பார்வையாளர்களால் பாவிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பொலித்தீன் பைகள் இளநீர் கோம்பைகள் வைத்தியசாலைகளில் பெருமளவு காணப்படுவது அவதானிக்க முடிகிறது இவை உடனுக்குடன் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும் அல்லது இவ்வாறான பொருட்கள் விடுதிக்குள் பயன்படுத்துவது தடை செய்யப்பட வேண்டும்
இவற்றுடன் மாவட்டத்தின் பல இடங்களில் தனியார் வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன. தனியார் வைத்தியசாலையில் சேகரிக்கப்படும் கழிவுகளையும் கட்டணம் அறவிட்டு எரியூட்டியில் எரிப்பதற்கு சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ கழிவுகளை எரியூட்டும் போது பொது மக்களுக்கு ஏற்படும் கதிர் வீச்சு தாக்கத்தை தடுக்கும் நடவடிக்கையாக எரியூட்டிகளை மக்கள் குடியிருப்பற்ற கடற்கரையோரங்களில் அமைப்பது சாலச்சிறந்ததாகும்.
சி. தவமலர்