மாரடைப்பால் மரணமடைந்த இளம் சினிமா விமர்சகர்

இளம் சினிமா பிரபலம் கௌஷிக் மாரடைப்பால் மரணமடைந்துள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா துறையில் ஒரு பத்திரிகையாளராக தன்னை தனித்துவமான ஆற்றலுடன் வெளிக்காட்டுவது எளிதான விஷயம் அல்ல.

அந்த வகையில், சிறந்த பத்திரிகையாளர், சினிமா விமர்சகர், மற்றும் விஜே என தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி, சமூக வலைத்தளத்தில் தனக்கென நிறைய ஃபாலோவர்ஸை வைத்திருப்பவர் கௌஷிக்.

இவர் ‘கலாட்டா’ என்கிற தனியார் இணையதளத்தில் விஜேவாகவும் பணியாற்றி வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவருக்கு 35 வயதே ஆகும் நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் கௌஷிக் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

Recommended For You

About the Author: webeditor