2008 ஆம் ஆண்டிலிருந்து அரசியல் கைதியாக மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேவதாஸ் கனகசபை
கொரோனா காலப்பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.
இதனடிப்படையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் விடுதலையாகியுள்ளார்.
விடுதலையின் நிமிர்த்தம் நன்றி கூறும் விதமாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ
மற்றும் ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நன்றி கூறுவதற்கு கடமைப்பட்டிருக்கின்றோம்.
இந்த விடுதலை சம்மந்தமாக கருத்துத் தெரிவித்த கனேடிய அமைப்பின் தலைவர் ரோய் சமாதானம், மீதம் இருக்கும் அரசியல் கைதிகளும் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.