நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் யோகா சான்றிதழ் வழங்கல்

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில்10.06.2023 ஆம் திகதி ஆரம்பமானது.

சனி, ஞாயிறு தினங்களிலும், அரச விடுமுறை தினங்களிலும் காலை-06.00 மணிமுதல் காலை-08.00 மணி வரை நடைபெறும் இவ் வகுப்புக்களில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாரும் வயது வேறுபாடின்றிக் கலந்து கொள்ள முடியும்.

சுமார் மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த இவ் அடிப்படைக் கற்கைநெறியைப்  பூரணமாக முடிப்பவர்களுக்கு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில், யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வில் வைத்து யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் அவர்களால் யோகா போதனாசிரியர் ஸ்ரீ. நதிபரன் அவர்களிடம் கையளிக்கப்பட்ட சான்றிதழ்கள் இன்றைய தினம் காலை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கு வழங்கப்பட்டது.

Recommended For You

About the Author: S.R.KARAN