சேக்கிழார் சுவாமிகள் குருபூசையும் மணவாளக் கோலத்திருவிழாவும்

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி மாசேரி திருவருள்மிகு புராதன குருநாதர் கோவில் ஸ்ரீலஸ்ரீ குருநாத நாகப்பசுவாமி சித்தர்பீடம் நடத்தும் வருடாந்த மணவாளக் கோலத்திருவிழாவும், சேக்கிழார் சுவாமிகள் குருபூசையும் நாளை 31.05.2023 புதன்கிழமை இரவு 7 மணிக்கு சிவநெறிப் பிரகாசகர், சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் விஷேட கலை நிகழ்வுகளுடன் இடம்பெறவுள்ளன.

அந்தவகையில் குருநாதர் சுவாமி கிராமவலம் எழுத்தருளி மாசேரி வரணி அருள்மிகு விக்கிரமா குளப்பிள்ளையார் ஆலயத்தில் சேக்கிழார் சுவாமிகளுக்கு விசேட பூஜை வழிபாட்டை தொடர்ந்து சொற்பொழிவினை செல்வன் ப. ஜஸ்மிகன் அவர்கள் சேக்கிழார் சுவாமிகள் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவும், சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படும்.

அதனை அடுத்து , பிள்ளைகளின் கல்வி வளச்சிக்குப் பெருதும் அக்கறை காட்டுவது தாயா ? தந்தையா? என்னும் பட்டிமன்றம் அதிபர் தி. அபராஜிதன் தலைமையிலும், குருநாதர் வில்லிசைக்குழுவினர் வழங்கும் ” என்றும் இளமை நாயனார் ” என்னும் விடயப்பொருளில் வில்லிசை சைவப்புலவர் சி. கா. கமலநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.

Recommended For You

About the Author: S.R.KARAN