யாழில் கஜேந்திரன் எம்.பி ஐ தூக்கி சென்ற பொலிசார்

யாழ். வலிகாமம் – தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ( 23) காலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி, நேற்று திங்கட்கட்கிழமை (22) மதியம் 3 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

 

இருவர் கைது
இந்த நிலையில், புதிய நீதிமன்ற உத்தரவொன்றை காண்பித்து போராட்டக்காரர்களை விலகும் படி பொலிஸார் கோரியிருந்தனர். எனினும் அதனை மறுத்த போராட்டக்காரர்கள் இன்று (23) காலை மீண்டும் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அதனை மீறி அங்கு நின்ற சட்டத்தரணி ஒருவர், நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனியார் காணி ஒன்றில் நின்றிருந்த வேளை அவரை வலுக்கட்டாயமாக தூக்கி காணியில் இருந்து பொலிஸார் அப்புறப்படுத்தி இருந்தனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை பொலிஸார் வலுக்கட்டாயமாக துக்கி சென்றதனால் அங்கு சற்று பதட்டமான நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor