வைகாசி 9 செவ்வாய் (23.05.2023)
கருமுத்து கண்ணன் காலமானார் என்ற செய்தியால் துவண்டேன். எனக்கு அவர் புரவலர் – இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் க சச்சிதானந்தன் இரங்கல்
2019 மாரச்சு 1 மதுரைக கப்பலூரில் சந்தித்த பின் நான் எழுதிய குறிப்பு.
மாசி 27, 2050 வெள்ளி (01.03.2019)
மதுரை கப்பலூர் தியாராயர் நூற்பாலை நிறுவனத் தலைமையகம்.
2007 தை முதல் நாள். தொலைப்பேசி அழைப்பு.
மறுபக்கக் குரல்.. கண்ணன் பேசுகிறேன், புத்தாண்டு வாழ்த்துகள். தேவாரம் மினனம்பலத் தளம் பார்த்தேன். மிகச் சிறந்த பணி. என் பங்களிப்பாக ரூ. 25.000 அனுப்பியுள்ளேன்.
நான்.. மிக்க நன்றி. யார் கண்ணன்?
குரல்.. கருமுத்து கண்ணன், தியாகாரயர் கல்லூரி, மதுரை.
நான்.. ஓ.. மிக்க மகிழ்ச்சி. உங்கள் குரல் கேட்டு மகிழ்கிறேன். உங்களுடன் பழகவில்லை ஆனாலும் உங்களை அறிவேன்.
குரல்…. என் சார்பில் ரூ. 25,000. மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ரூ. 25,000 அனுப்பி உள்ளேன்.
நான்… மிக்க மகிழ்ச்சி. நன்றி. உங்கள் உற்சாகத்தால் மேலும் பணிபுரிவேன். தருமபுரம் குருமகாசந்திதானத்திடம் தெரிவிக்கிறேன். நன்றி.
12 ஆண்டுகளின் பின் பெருமகன் திரு. கருமுத்து கண்ணன் அவர்களை (17 நூற்பாலைகளின் தலைவர், 21 கல்வி நிறுவனங்களின் தலைவர்) முதன் முதலாகச் சந்திக்கும் வாய்ப்பு. அவரது கப்பலூர் அலுவலகத்தில் என்னை அன்பு பாராட்டி வரவேற்று, விருந்தோம்பினார். அவரின் திருமகன் அரி தியாகராசன் கூடவே இருந்தார்.
மதுரை தியாகராயர் கல்லூரியில் கருமுத்து கண்ணனாரின் திருமகன் அரி தியாகராசனாரின் அன்பு மழையில் நனைந்தபடங்களும் இணைப்பில்