பாடசாலை வான் கட்டணம் குறித்து வெளியாகியுள்ள செய்தி

எரிபொருட்களின் விலை குறைவினால் பாடசாலை வேன் கட்டணத்தை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல் ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவர் கருத்து தெரிவிக்கையில் விலையை சதவீதமாக குறைப்பது கடினம் எனவே பேசி விலையை தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

“அதிகரிப்பு விஷயத்தில் பெற்றோர், உரிமையாளர் மற்றும் ஓட்டுநருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் விலையைக் குறைக்க அவர்களுடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

இதேவேளை எரிபொருள் விலை குறைப்பின் அனுகூலத்தை பேரூந்து கட்டணத்தில் மட்டுமன்றி ஏனைய பிரதேசங்களிலும் மக்களுக்கு வழங்க வேண்டும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor