வவுனியா – நெளுக்குளம் பகுதியில் 24 வயது இளைஞரொருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெளுக்குளம் – நேரியகுளம் வீதியை சேர்ந்த இளைஞன் வீட்டில் யாரும் இல்லாத போது தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.