5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்

உச்சநீதிமன்றத்தில் மேலும் 5 புதிய நீதிபதிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனை அடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆகஉயர்ந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளை உச்சதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 நீதிபதிகளின் பெயர்களும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த ஐந்து நீதிபதிகளின் நியமனம் குறித்து எற்கனவே மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் இந்த புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்ற நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்ததுள்ளது.

Recommended For You

About the Author: admin