பெங்களூருவில் இன்று நடைபெறும் ‘இந்தியா எரிசக்தி வார’ மாநாட்டில், 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
பெட்ரோலில் 1.4 சதவீத எத்தனால் கலக்கப்பட்டு அதன் விற்பனை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. அதன்பிறகு, 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை கடந்த 2022 நவம்பரில்அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டது. 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை 2030-ல்அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர், இதை 2025-ல் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. தற்போது இலக்கு காலத்துக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிமுகம் செய்யப்படுகிறது. பெங்களூருவில் இன்று நடைபெறும் ‘இந்தியா எரிசக்தி வார’ மாநாட்டில் இ20 எனப்படும் 20 சதவீதஎத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். முதல்கட்டமாக நாடு முழுவதும் 67 பெட்ரோல் நிலையங்களில் இ20 பெட்ரோல் விற்பனை தொடங்கும்