நடிகை நயன்தாராவிற்கே இந்த நிலைமையா

தமிழ் சினிமாவில் பல நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருப்பவர் நயன்தாரா. ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பது மட்டுமல்லாமல், சோலோ ஹீரோயினாகவும் களமிறங்கி தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கினார்.

20 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் நயன்தாரா பல கஷ்டங்களை சந்தித்துள்ளார். அப்படி அவர் சந்தித்த பல கஷ்டங்களில் ஒன்று அட்ஜஸ்ட்மென்ட்.

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகளுக்கு தான் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை ஏற்படுகிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளுக்கே இப்படியொரு பிரச்சனை ஏற்படுகிறதாம்.

ஒரு முறை படத்தில் நல்ல ரோலில் நடிக்க வைப்பதாக கூறி அதற்க்கு நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் மட்டும் செய்யவேண்டும் என்று நயன்தாராவிடம் கேட்டுள்ளார்களாம்.

ஆனால், நயன்தாரா அப்படிப்பட்ட வாய்ப்பு தனக்கு தேவையில்லை என தூக்கி எறிந்துள்ளார். நேர்மையான வழியில் சென்று கிடைக்கும் பட வாய்ப்பே நிலையானது என்று எண்ணி நயன்தாரா இப்படியொரு முடிவை எடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin