தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா

உக்ரைனின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மேலும் உக்கிரமடைந்து வருவதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரேனின் கிழக்குப் பகுதியை கைப்பற்றுவதற்கு ரஷ்யா தனது இராணுவ முயற்சியை தீவிரப்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ரஷ்யா மென்மேலும் படையினரை அந்தப் பகுதியில் குவித்து வருவதாக சொல்லப்படுகின்றது.

அண்மையில் உக்ரைனின் பக்மூட் நகரத்தை கைப்பற்றிய ரஷ்ய துருப்புக்கள், தற்போது டொனேட்ஸ் (Donetsk) இன் தென்மேற்கே உள்ள உஹ்லேடர் (Vuh-le-dar) நகரைக் கைப்பற்ற முனைப்புக் காட்டுவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, உக்ரேனியப் படையினருக்கு இராணுவ தளபாடங்கள் அனுப்பப்படும் முக்கியமான பகுதிகள், மற்றும் பாதைகளை கைப்பற்றுவதற்கு ரஷ்யப் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் தற்காப்பு ஆயுதங்கள்,
தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா – உக்ரைன் அதிபரின் கோரிக்கை – தற்காப்பு ஆயுதங்களை வழங்கும் பிரிட்டன்! | World Ukrainian President Says War Getting Worse
அதேசமயம், ரஷ்யா படையினரின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தி, உக்ரேனின் ராணுவ ஆற்றலை வலுப்படுத்த கூடுதல் உதவிகளை வழங்கும்படி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்கிடம் உக்ரைன் அதிபர் கேட்டுள்ளார்.

உக்ரைன் அதிபரின் கோரிக்கையை ஏற்று, பிரிட்டனின் தற்காப்பு ஆயுதங்கள் கூடிய விரைவில் உக்ரேனுக்கு வழங்கப்படும் என பிரிட்டன் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin