லாஃப் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

லாஃப் காஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு சமையல் எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 ரூபா என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி , கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் லாஃப் காஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,032 ரூபாவாகும்.

மேலும், மற்றைய மாவட்டங்களுக்கான புதிய விலைகளை அறிந்துகொள்ள வாடிக்கையாளர் சேவை இலக்கமான 1345 ஐ தொடர்புகொள்ளுமாறு லாஃப் காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor