யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் மிதந்து வந்த நிலையில் கடற்தொழிலாளர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்தொழிலாளர் நேற்றுமுன் தினம் (02.01.2023) கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று (03.01.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்பு
சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த கணபதி தவம் (வயது 58) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உறவினர்கள் சடலத்தினை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முற்பட்டவேளை கடற்படையினருக்கும் உறவினர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
பின் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த புலத்சிட்டி தொடருந்து மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தத் தகவலை வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார ஊடகங்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.
புனானை தொடருந்து நிலையத்துக்கும் வாழைச்சேனை தொடருந்து நிலையத்துக்கும் இடையில் அமைந்துள்ள ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் நேற்றிரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.