அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் 10 சதவீதத்தினால் குறித்த கட்டணம் குறைக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை குறைப்பு
நேற்று முன் தினம் இரவு எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.
எனினும் சாதாரண பயணிகள் பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என்று பேருந்து உரிமையாளர் சங்கங்கள் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.