யாழ் பருத்தித்துறையில் ஆள் இல்லா வீட்டிற்குள் திருடன் கைவரிசை!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலியில் 33 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்றுப் பகல் இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.

வீட்டிலுள்ளவர்கள் தமது தொழில் நிமித்தமாக வெளியே சென்ற சந்தர்ப்பத்தை வாய்ப்பாகப் பயன்படுத்திய திருடர்கள் இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர்கள் மீண்டும் வந்து பார்த்தபோது நகைகள் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப் பட்டுள்ளது.

மேலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor