ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய விலை
அதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை 1,200 ரூபாவாகும். முன்னர் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,450 ரூபாவாக இருந்த நிலையில் தற்போது இந்த விலைகுறைப்பு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை பொருளாதார நெருக்கடியுடன் வந்த தடைகளையும் மீறி கோழி பண்ணையாளர்கள் கோழி வளர்ப்பை அதிகரித்துள்ளதால் மேற்படி தீர்மானமானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.