இறைவரித் திணைக்களம் வரலாற்றுச் சாதனை: ஜனாதிபதி நேரில் சென்று பாராட்டு!

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 93 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, 2025ஆம் ஆண்டில் 2,203 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 33 பில்லியன் ரூபாய் அதிகம் எனவும், கடந்த ஆண்டை விட 15% வளர்ச்சி... Read more »

இங்கிலாந்து அரசாங்க ரகசியத் தகவல்கள் தவறுதலாக வெளியீடு

இங்கிலாந்தில் அரசாங்க ஆவணங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட ஒரு நிர்வாகத் தவறு காரணமாக, ஆண்ட்ரூ இளவரசரின் பயணத் திட்டங்கள் குறித்த ரகசியத் தகவல்கள் ஊடகங்களுக்குத் தற்செயலாகக் கசிந்துள்ளன. பொதுவாக இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும் இத்தகைய அரசு ஆவணங்களில், அரச குடும்பம் தொடர்பான விவரங்கள் மட்டும்... Read more »
Ad Widget

ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை ; மத்திய கிழக்கில் மீண்டும் போர்

ஈரான் அணுசக்தித் திட்டம் அல்லது ஏவுகணைத் திறனை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்தால், அந்நாட்டின் மீது கடுமையான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. புளோரிடாவில் உள்ள தனது... Read more »

கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் துயரம்; தீ விபத்தில் தாயும் இரு குழந்தைகளும் உயிரிழப்பு

இங்கிலாந்தின் (Gloucestershire) குளோஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள (Brimscombe) பிரிம்ஸ்கோம் ஹில் பகுதியில் (Boxing Day ) பாக்ஸிங் டே தீ விபத்தில் தாயும் நான்கு மற்றும் ஏழு வயதுடைய இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி அதிகாலையில் நேர்ந்த... Read more »

அமீரக ஆதரவு படைகள் மீது யேமனில் சவூதி தாக்குதல்

ஐக்கிய அமீர ஆதரவுடன் செயல்பட்டுவரும் யேமன் பிரிவினைவாதப் படையினரைக் குறிவைத்து அந்த நாட்டின் முகல்லா துறைமுக நகரில் சவூதி அரேபிய செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா... Read more »

ஈரானுடான மோதலை தவிர்க்குமாறு ரஷ்யா வலியுறுத்தல்!

இஸ்லாமியக் குடியரசின் மீதான மற்றொரு பாரிய தாக்குதலை வொஷிங்டன் ஆதரிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, ஈரானுடான மோதலைத் தவிர்க்குமாறு ரஷ்யா செவ்வாயன்று (30) அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியது. புளோரிடாவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் திங்களன்று பேசிய ட்ரம்ப்,... Read more »

சாரதிகளுக்கு எச்சரிக்கை !குற்றவியல் சட்டம் பாயும் !!

மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக, இனி போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப்... Read more »

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது..!

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அதேநேரம் சம்பளம் மற்றும்... Read more »

அரசியலமைப்பு சபை தனது எல்லையை மீறியுள்ளது..!

கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதில் அரசியலமைப்பு சபை குறுகிய நோக்கங்களின் அடிப்படையில் தனது எல்லையை மீறி செயற்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாக உள்ளமை தொடர்பில் அரச தகவல் திணைக்களத்தில் இன்று (30)... Read more »

பாடப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர்..!

6 ஆம் தர ஆங்கில மொழிப் பாடப் பயிற்சிப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் இடம்பெற்றுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, அது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்தத் தகவல் உண்மையெனத் தெரியவந்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்தப் புத்தகங்களின்... Read more »