இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 93 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, 2025ஆம் ஆண்டில் 2,203 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 33 பில்லியன் ரூபாய் அதிகம் எனவும், கடந்த ஆண்டை விட 15% வளர்ச்சி எனவும் ஆணையாளர் நாயகம் ருக் தேவி பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்தச் சாதனையைப் பாராட்டுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (30) திணைக்களத்திற்கு நேரில் விஜயம் செய்தார். இறைவரித் திணைக்கள வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

