பாடப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர்..!

6 ஆம் தர ஆங்கில மொழிப் பாடப் பயிற்சிப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் இடம்பெற்றுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, அது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்தத் தகவல் உண்மையெனத் தெரியவந்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்தப் புத்தகங்களின் அச்சிடும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, குறித்த பயிற்சிப் புத்தகங்களை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்தியுள்ள கல்வி அமைச்சு, இது தொடர்பில் அவசர விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக நாளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலதிகமாகத் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin