CIDயின் பொறுப்பில் உள்ள வாகனங்களை கையளிக்குமாறு உத்தரவு!

யுக்திய சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த இரண்டு மாதங்களாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை அதன் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வாகனங்களை மேலதிக விசாரணைகளுக்காக, தொடர்ந்தும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்... Read more »

தங்கல் பட நடிகை சுஹானி பட்னாகர் திடீர் மரணம்

அமீர் கான் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘தங்கல்’ திரைப்படத்தில், பபிதா குமாரி போகத் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சுஹானி பட்னாகர். அந்த படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக புகழ்பெற்ற இவர் பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே தனது கல்வியை தொடர்வதற்காக... Read more »
Ad Widget

சீன எதிர்ப்பு வாதத்தை மீண்டும் கையில் எடுக்கும் மைத்திரி

இலங்கைத் தீவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஜனாதிபதி பதவியேற்க வேண்டும். ஆனால், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை எடுப்பதற்கு பதிலாக நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க வேண்டுமென்ற தீப்பொறியை அரசாங்கம் பற்ற வைத்துள்ளது. ஆளுங்கட்சிக்கும்... Read more »

மன்னார் சிறுமி கழுத்து நெரித்தே கொல்லப்பட்டார்: பிரேத பரிசோதனையில் அம்பலம்

தலைமன்னாரில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இன்றையதினம் (17) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை... Read more »

நவல்னியின் மரணம் – நேரடியாக புடினை குற்றம் சுமத்திய பைடன்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணத்துக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது அடியாட்களே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம் சுமத்தியுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெஸி நவல்னி, புட்டினைக் கடுமையாக விமர்சித்தவர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவல்னி, பெப்ரவரி... Read more »

மியான்மரில் இலங்கை மீனவர்களுக்கு சிறைத்தண்டனை

மியான்மரில் அண்மையில் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளின் செலுத்துனர்கள் இருவருக்கு மியான்மர் நீதிமன்றத்தினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட ஏனைய 13 மீனவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். இருப்பினும், பொது மன்னிப்பின்... Read more »

ரணில் அரசாங்கம் மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான தரத்தில் இலங்கை பின்னோக்கிச் செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘‘மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி விவகாரங்களில் இலங்கை உரிய தர நிர்ணயங்களை எட்டத் தவறியுள்ளது. பொறுப்புக்கூறல் விவகாரங்களில் நிலவி வரும் குறைபாடுகள்... Read more »

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதவியில் இருந்து நீக்க வேண்டும்

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்று இந்தியாவில் கூறியது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய மற்றும் அரச விரோத கருத்து என பலர் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.... Read more »

அமெரிக்கா, சீனா, இந்தியா எம்முடனான உறவை விரும்புகின்றன

‘‘தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்தவொரு விடயத்தையும் செய்யாது. ஆனால், சீனாவுடனான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் பேணப்படும்.‘‘ இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்ட... Read more »

டெல்லியில் இடிந்து வீழ்ந்த ஜவஹர்லால் நேரு மைதான மேடை: எட்டுப் பேர் காயம்

டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் உள்ள தற்காலிக மேடை சனிக்கிழமை காலை 11 மணியளவில் இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர். மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மைதானத்தின் நுழைவு வாயில் எண் 2 அருகே சில பணிகள்... Read more »